Sunday, 1 January 2012

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்


 புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம்தன் பணியை துவங்குகிறது.  மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட அடிப்படை புற்றுநோய் பரிசோதனையை செய்வது நல்லது. இந்த விழிப்புணர்வுதான் கரு.


கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000

பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.

1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.

2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.

3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.

4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.

கட்டுரை :  சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி

முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000

பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.

விதிமுறைகள்:

கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.


நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.

சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி

முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000

விதிமுறைகள்

குறும்படம் 7 முதல் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.

எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.

பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.

நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.

பொதுவானவை

1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும்.  யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.

2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ )  இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது. 

3.உங்கள் படைப்புகளை ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும்.

4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும். 

5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.

7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும். 

8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்

9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.

10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.

சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்

இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம்.  வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள்  வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.

மேலும் விவரங்களுக்கு : http://nesampeople.blogspot.com/


அன்புடன்
யுடான்ஸ் குழு
தொடர்புக்கு : udanztv@gmail.com , admin@udanz.com
www.udanz.com , www.tv.udanz.com

Wednesday, 21 December 2011

சவால் சிறுகதைப் போட்டி 2011 - பரிசளிப்பு விழா

சவால் சிறுகதைப் போட்டி 2011.

 நண்பர்கள் ஆதிமூலக்கிருஷ்ணன் மற்றும் பரிசல்காரன் இணைந்து சவால் சிறுகதைப் போட்டியை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு அவர்களுடன் யுடான்ஸ் குழுமமும் இணைந்துக் கொண்டதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றிய அறிவிப்புகளையும் போட்டிக் குறித்த விவரங்களும்  ஆதிமூலக் கிருஷ்ணன், பரிசல்காரன் மற்றும் யுடான்ஸ் தளங்களில் இடம் பெற்றன. 

போட்டியில் பங்குபெற்ற கதைகளை யுடான்ஸ் தளத்தில் படிக்கலாம்.
போட்டியில் பங்குபெற்ற கதைகளை ஆதிமூலக்கிருஷ்ணனின் தளத்தில் காணலாம்.

போட்டியில் ஏராளமான தமிழ்ப் பதிவர்கள் பங்குபெற்று மிகச் சிறந்த கதைகளை அனுப்பி இருந்தார்கள். நடுவர்களின் உதவியுடன் சில சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிப்பு விழா அறிவிக்கப் பட்டிருந்தது. 
அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறு (18.12.2011) அன்று சென்னை டிஸ்கவரி புக்பேலசில்( Discovery Book Palace, Chennai ) பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக அரங்கேறியது.

யுடான்ஸ் குழுமத்தின் சார்பில் கேபிள் சங்கர் வரவேற்றுப் பேசினார். திரைப்படஇயக்குனர்கள் திரு.பத்ரி, திரு.நவீன் மற்றும் திரு.சிபிசுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். எழுத்தாளர்கள்திரு.ரமேஷ்வைத்யா மற்றும் திரு.ராஜசுந்தர்ராஜன் , திரு. அப்துல்லா, திரு. சுரேகா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி விழாவை இனிமையாக்கினர்.போட்டியை மிகச் சிறப்பாக நடத்தியதில் ஆதிமூலக்கிருஷ்ணனுடன் இணைந்து செயல்பட்ட பரிசல்காரன் நன்றி கூறினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆதிமூலக்கிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.

டிஸ்கவரி புக் பேலசில் விழா நடத்த இடம் கொடுத்ததோடு, வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களும் வழங்கி சிறப்பித்த திரு. வேடியப்பன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளோம்.
நண்பர் கார்க்கி, விழாவை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி மேலும் நல்லதொரு விழாவாக்கினார். பரிசளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் ஆதி, பரிசல்காரனுடன் இணைந்து யுடான்ஸ் குழுமம் நன்றி தெரிவிக்கிறது. 

விரைவில் மற்றுமொரு போட்டி அறிவிப்புடனும் உங்கள் அனைவரையும் நேரடியாக சந்திக்கிறோம். நன்றி.

அன்புடன் 
யுடான்ஸ் குழு 
தொடர்புக்கு : 
udanztv@gmail.com , admin@udanz.com 
www.udanz.com , www.tv.udanz.com

Thursday, 15 December 2011

சவால் சிறுகதைப் போட்டி 2011 முடிவுகள்

அன்பான போட்டியாளர்கள் மற்றும் இணைய நண்பர்களே, 
”இப்பதான் விஷ்ணு கிட்ட இருந்து போன் வந்தது, ஆனால் பேசினது எஸ்.பி.கோகுல். நான் என்னோட ரிவால்வர பேன்ட் பாக்கெட்ல செருகினேன். 'டிஎஸ்பி அனுஜன்யா சாருக்கு' என்று எழுதிய பார்சல் இப்போதுதான் என் டேபிளுக்கு வந்தது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் முழுத் தகவலும் வரும். தூக்கிக்கொண்டு நேரே ஆப்பிரிக்காவில் போய் செட்டிலாகிவிட வேண்டியதுதான். அத்தனை வில்லன்களையும் பிடித்து புழல் சிறையில் அடைத்துவிட்டு நிம்மதியாக சேரில் அமர்ந்தேன். ’இன்ஸ்பெக்டர் அப்துல்லா இலங்கை போயிருக்கிறார், வருவதற்குள் நாமே கொலையாளியைப் பிடித்துவிடமுடியுமா?’ என்று கேட்டார் சிறப்புப்படை கமாண்டோ ஸ்ரீதர் நாராயணன். யோசனையோடு கைக்குட்டையில் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்து, அலை பேசியையும் ஒற்றினேன்.”

சமீபத்தில் ஒருநாள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா ஆகியோருடன் பரிசலும் நானும் போட்டி முடிவுகள் குறித்த ஒரு கான்ஃபரன்ஸில் இருந்த போது அவர்கள் மூவரும் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்ததுதான் மேலே நீங்கள் காண்பது. இதிலிருந்தே தெரிந்துகொண்டிருக்கலாம்.. ஆம்.! இவர்கள்தான் நமது கிரைம் கதைகளில் மூழ்கி இந்த நிலைக்குப் போன, நம்முடைய இந்த ஆண்டு சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றிக்கதைகளை தேர்ந்தெடுக்கும் பணியேற்று நம்மைப் பெருமை செய்த நடுவர்கள் என்று.

அனுஜன்யாவிடம் விபரம் சொல்லி பொறுப்பேற்கச் சொன்னதுமே, பின்னணியிலிருக்கும் பெண்டு நிமிர்க்கும் வேலையை எப்படி கண்டுகொண்டாரோ தெரியவில்லை, ‘நா ரொம்ப பிஸி’ என்று தப்பியோட முயன்றார். பின்னர் நம் ‘பதிவர்களால், பதிவர்களுக்காக..’ ஸ்லோகத்தை லைட்டா உல்டா செய்து, ’இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் போட்டியில் ஒரு இளைஞர் நடுவர் என்றால்தானே சிறப்பு’ என்று கூறி அவரை அரைமயக்கத்தில் ஆழ்த்தி சம்மதிக்க வைத்தோம்.
சென்ற ஆண்டு சவால் போட்டியில் கலந்துகொண்டு கலக்கல் கதை எழுதி, முதல் பரிசை வென்றவர்களுள் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனைக் கேட்டபோது டக்கென ஒப்புக்கொண்டார். பாவம் அவருக்கு அவ்வளவு விவரம் பத்தவில்லை அப்போது. பின்னாடி அவர் புலம்பியதை ஒரு தனி தொடராகவே எழுதலாம். சென்ற ஆண்டின் நடுவர்களில் ஒருவராக இருந்தும், மீண்டும் களம் காணும் துணிச்சல் ஒருவருக்கு இருக்குமானால் அது அப்துல்லாவிற்கு மட்டும்தான் இருக்கும் என்று சொல்லிவிடலாம்.
நடுவர்களின் திறனையும், கதைகள் மீதான அவர்களின் ஆர்வத்தையும் நாங்கள் சொல்வதெற்கெல்லாம் அவசியமில்லை என்பதை நண்பர்கள் நீங்கள் அறிவீர்கள். சவால் மற்றும் விதிமுறைகளோடு கூடிய போட்டி குறித்த முதல் அறிவிப்பை இங்கே காணலாம். துவக்கத்தில் ஒன்றிரண்டு என மெதுவாக வர ஆரம்பித்த கதைகள் பிற்பகுதியில் வந்து குவியத்தொடங்கின.
ஆம், சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஏராளமானோர் (78 பேர்) போட்டியில் கலந்துகொண்டு எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த போட்டியாளர்களின் அன்புக்கும், இதன் பின் நின்ற நண்பர்களுக்கும், போட்டியை ஸ்பான்ஸர் செய்து நடத்தித்தந்த 'யுடான்ஸ்' திரட்டிக்கும், இணைய வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
கீழே நடுவர்களின் மடல்.. 

-அன்புடன்
ஆதிமூலகிருஷ்ணன், பரிசல் கிருஷ்ணா மற்றும் யுடான்ஸ் குழு.
ooo0ooo
அன்பு நண்பர்களே,
பல்வேறு காரணிகளை புனைந்துகொண்டு அதன் கீழ், சற்று சிரமத்துடனே கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறோம். போட்டி குறித்தும், தேர்வு செய்தமை பற்றியும், வெற்றிபெற்ற கதைகள் பற்றியும், அவற்றின் ’விதிமுறைகளுடன் 100% பொருந்தாத தன்மை’ பற்றியும், அடைந்த குழப்பங்கள் பற்றியும் நிறைய எழுதலாம் என்று தோன்றுகிறது. இனியும் பில்டப் செய்துகொண்டிருக்காமல் நேரடியாக ரிஸல்டுக்குப் போய்விடுவது நல்லது என்பதையும் உணர்கிறோம். பரிசுகளுக்கான இடங்களுக்கு பலத்த போட்டியுடன் ஏறத்தாள ஒரே மதிப்பெண்களுடன் சில கதைகள் இருந்தமையால் முதல் மூன்று இடங்களை இரண்டிரண்டு கதைகள் பகிர்ந்துகொள்கின்றன.

இறுதிச் சுற்றுக்கு வந்த 15 கதைகளில் மற்ற 9 கதைகள் : இவையும் அறிவிக்கப்படாத ஆறுதல் பரிசுகளைப் பெற இருக்கின்றன.
நகல் - கோமாளி சிவா
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட - சன்
கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் - சரவணவடிவேல்.வே
உதயசூரியன் - கார்த்திக் பாலா
அர்த்தமுள்ள குறியீடு - ஸ்ரீ மாதவன்
ரங்கு குரங்கு ஆன கதை - வெண்புரவி
பீமனின் பராக்ரமம் - இராஜராஜேஸ்வரி
குறிப்பறிதல் - நவநீதன்
மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும் - சன்

இவை தவிரவும் போட்டியில் கலந்து கொண்ட பலரும் மிகுந்த ஆர்வத்துடன் புதுமையாகவும், சுவாரசியமாகவும், நிறைவாகவும் கதை சொல்லியிருந்தார்கள். வேறு பல காரணிகளில் சிறப்பாக விளங்கிய கதைகளும் அனேகம் இருந்தன. அவற்றில் மனோ எழுதிய ’நீதானே என் பொன்வசந்தம்..’, அபிமன்யு எழுதிய ’அலைபேசி’, கணேஷின் ‘அறியா உலகம்’, பார்வையாளன் எழுதிய ‘பாப்பா போட்ட தாப்பா’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். இவை நூலிழையில் பரிசுகளைத் தவறவிடுகின்றன.

வெற்றிபெற்றோருக்கும், கலந்துகொண்டோருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துவதற்கு வெற்றியை விடவும் பங்கேற்பு என்பதே சிறந்த காரணி என்பதை அறிவீர்கள். இப்படியொரு நல்வாய்ப்பினை நல்கிய ஆதி, பரிசல் ஆகியோருக்கு நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் -
அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம்.அப்துல்லா.

போட்டிக்களத்திலிருந்த மொத்தக் கதைகளின் வரிசையையும் இந்த இணைப்புகளில் நீங்கள் காணலாம். இணைப்பு 1, இணைப்பு 2. களத்திலிருந்தவை மொத்தம் 78 கதைகளாகும்.

இன்று சுடுவது நிச்சயம் –என்றொரு கதையை வேங்கட ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதியிருக்கிறார். போட்டிக்கான இறுதிநாளைக் கடந்து அனுப்பப்பட்டதால் இதை போட்டிக்கு ஏற்கமுடியவில்லை. போட்டிக்கல்ல என்று குறிப்பிட்டே ஒரு கதையும் தாமதமாக எழுதப்பட்டிருந்தது. நீச்சல்காரன் என்பவர் எழுதிய கஞ்சத்தின் தலைவா! என்பதே அது. ஆகவே அதுவும் போட்டியில் இல்லை. முடிவுகள் வெளியாகுமுன்பே ஒரு ஆர்வத்தில் வெளியான விமர்சனங்களை கொண்டு கணிக்கப்பட்ட ஒரு பதிவு பார்வையாளனால் எழுதப்பட்டிருந்தது மற்றொரு சுவாரசியம்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு விபரங்களை விரைவில் இன்னொரு பதிவில் காணலாம். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

- பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன், யுடான்ஸ் 


அன்புடன்
யுடான்ஸ் குழு
தொடர்புக்கு : udanztv@gmail.com , admin@udanz.com
www.udanz.com , www.tv.udanz.com

Saturday, 1 October 2011

சவால் சிறுகதைப்போட்டி -2011 அறிவிப்பு

அன்பர்களுக்கு வணக்கம். 
பரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்..
சவால் சிறுகதைப்போட்டி -2011
பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் உங்கள் யுடான்ஸ் தமிழ் வலைப்பூக்கள் திரட்டி, தொடர்ந்து புதிய வசதிகளோடும், ஆக்கங்களோடு உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் யுடான்ஸ் தனது அங்கமாக யுடான்ஸ்டிவி-யைத் தொடங்கியதையும் அறிவீர்கள். அதனைத் தொடர்ந்து அடுத்த சுவாரசிய அறிவிப்பாக இதோ வெளியாகிறது “சவால் சிறுகதைப் போட்டி -2011”.
தமிழ் வலையுலகின் பிரபல முகங்களான திரு. பரிசல்காரன் மற்றும் திரு. ஆதிமூலகிருஷ்ணன் (தாமிரா) ஆகியோர் கடந்த ஆண்டில் ”சவால் சிறுகதை” என்ற பெயரில் ஒரு சிறுகதைப் போட்டியை பிரமாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தினார்கள். இந்த வருடமும் அவர்கள் அதுபோன்ற ஒரு ’சவால் சிறுகதைப் போட்டி’யை நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது ’யுடான்ஸ் குழுமம்’ அவர்களை அணுகி அவர்களுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தது. அவர்களும் இதற்கு இனிதே சம்மதம் தெரிவித்தார்கள். அவர்களுடன் இணைந்து இந்த ஆண்டிற்கான சவால் சிறுகதைப் போட்டியை நடத்துவதில் யுடான்ஸ் குழுமம் பெருமை அடைகிறது. இதற்கு யுடான்ஸ் பயனர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
போட்டியில் கலந்துக் கொள்பவர்கள் “சவால் சிறுகதைப் போட்டி 2011” கருவிப்பட்டை(Widget) மற்றும் வாக்குப் பட்டையை(Vote bar) தங்கள் வலைப்பூக்களில் இணைத்துக் கொண்டால் மேலும் அதிக வாசகர்களைச் சென்றடைந்து அதிக வாக்குகளையும் பெற முடியும். வாசகர்களின் வாக்குகளும் வெற்றிக்கான 10 சதவீத மதிப்பை அளிக்க இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்.
போட்டியில் பங்கு பெறும் சிறுகதைகள் சவால் சிறுகதைப் போட்டி 2011 என்ற பிரிவின் கீழ் யுடான்ஸில் தனித்தொகுதியாக திரட்டப்படும். வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த சிறுகதைகளுக்கு வாக்களிக்கலாம். நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம். கூகுள் பஸ், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பகிர்ந்துக் கொள்ளலாம். இதன் மூலம் சிறந்த சிறுகதை எழுதுபவர்கள் அனைவரையும் சென்றடையவும், வெற்றிபெற அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும்.
வெற்றிபெறும் கதைகள் ரூபாய்.3000/- மதிப்புள்ள புத்தகப்பரிசுகளைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன. கதை எழுதுவதற்கான முக்கிய விதியான, கொடுக்கப்பட்டுள்ள சவாலைத் தெரிந்துகொள்ளவும் பிற தகவல்களை அறியவும்திரு.பரிசல்காரன் மற்றும் திரு.ஆதிமூலகிருஷ்ணன் ஆகியோரின் பதிவுகளைக் காணலாம்.
யுடான்ஸ் வாக்குப் பட்டையை இணைக்க கருவிப்பட்டை( Vote bar) பக்கத்திற்கு செல்லவும்.
சவால் : 

 
இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.
விதிமுறைகள் :
  • கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.
  • கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.
  • வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ளமுடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்படவேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக்கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.
  • கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.
  • ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.
  • வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.
  • மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.
  • யுடான்ஸ் திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.
  • 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.
  • பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.
  • பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.
  • போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும்.www.udanz.comwww.parisalkaaran.comwww.thaamiraa.com
  • சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.
  • போட்டிக்காக வரும் சிறுகதைகளை அதீதம் மின்னிதழ் தொகுத்து அளிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். போட்டிக்கான கதைகள் அனைத்தும் ஓரிடத்தில் படிக்க வகை செய்யும் வகையில் அனைத்து கதைகளும் அதீதம் மின்னிதழில் தொகுக்கப் படும். Link :http://www.atheetham.com

    வாழ்த்துகளுடன்
    யுடான்ஸ் நிர்வாகம்


  • அன்புடன்
    யுடான்ஸ் குழு
    தொடர்புக்கு : udanztv@gmail.com , admin@udanz.com
    www.udanz.com , www.tv.udanz.com

    Friday, 30 September 2011

    Welcome to udanz blog

    வணக்கம் நண்பர்களே..
    யுடான்ஸ் குழுமம் திரட்டி, இணையத் தொலைக்காட்சி போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு புதிய சேவைகளை வழங்கத் திடமிட்டுள்ளது.எனவே யுடான்ஸ் குழுமத்தின் சேவைகள் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து தமிழ் இணையப் பயனர்களுக்கு அறிவுப்புகளை வழங்கவும் உரையாடவும் இந்த வலைப்பூ வசதியை மகிழ்ச்சியுடன் அறிமுகப் படுத்துகிறோம்.

    யுடான்ஸ் திரட்டி மற்றும் யுடான்ஸ் இணையத் தொலைக்காட்சியில் நடைபெறும் போட்டிகள், புதிய சேவைகள், தொழில்நுட்ப வசதிகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இந்த வலைப்பூவில் இடம்பெறும்.

    தங்கள் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

    அன்புடன்
    யுடான்ஸ் குழுமம்